/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அயல் பணிகளுக்கு சென்ற போலீசார்; லோக்கல் பாதுகாப்புக்கு திணறும் அதிகாரிகள்

ADDED : செப் 10, 2024 12:34 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அயல் பணிக்கு போலீசார் சென்றதால், லோக்கல் பாதுகாப்பிற்கு போலீசாரை அனுப்ப முடியாமல் அதிகாரிகள் புலம்புகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் இருந்தாலும், பலர் ஓ.டி.,யாக வேறு மாவட்டங்களில் அயல் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். இவர்கள் எந்த பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது இங்குள்ள காவல் துறை அதிகாரிகளுக்கே தெரியாத நிலை உள்ளது.
உதாரணமாக, விழுப்புரம் டவுன், தாலுகா, மேற்கு போலீஸ் ஸ்டேஷன்களில் 100க்கும் மேற்பட்ட போலீசார் உள்ள நிலையில், தற்போது இங்கு 50க்கும் குறைவான போலீசாரே பணிகளில் உள்ளனர்.
இந்த புகாரை சரிசெய்ய வேண்டிய தனிப்பிரிவில் தற்போது இன்ஸ்பெக்டர் பொறுப்பு காலியாக உள்ளது. ஆயுதப்படையில் 240 போலீசார் உள்ளனர். ஆனால், 35 போலீசார் மட்டுமே தினசரி பாதுகாப்பு பணிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். மற்ற போலீசார் எந்த பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது புதிராகவே உள்ளது.
இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டம், ஊர்வலம், அரசியல் தலைவர்களின் நிகழ்ச்சிகளுக்கு போதுமான போலீசாரை பாதுகாப்பு பணிகளுக்கு அனுப்ப முடியாமல், ஊர்காவல் படை, அதிரடிப்படை, சிறப்பு படை போலீசாரை அனுப்பி உயர் அதிகாரிகள் அட்ஜஸ்ட் செய்து வருகின்றனர்.