/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்முடி மீதான குவாரி வழக்கு சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் சாட்சியம்
/
பொன்முடி மீதான குவாரி வழக்கு சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் சாட்சியம்
பொன்முடி மீதான குவாரி வழக்கு சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் சாட்சியம்
பொன்முடி மீதான குவாரி வழக்கு சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் சாட்சியம்
ADDED : ஏப் 30, 2024 04:57 AM
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் சாட்சியம் அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம், பூத்துறை குவாரியில் விதிமுறை மீறி செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் மொத்தம் உள்ள 67 சாட்சிகளில், 26 பேர் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 22 பேர் பிறழ் சாட்சியாகினர்.
நேற்று நடந்த விசாரணையில் 27வது சாட்சியான, அப்போதைய விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டரான, தற்போதைய திருச்சி சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் குமார், ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர், இவ்வழக்கு தொடர்பாக, அப்போதைய மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., அறிவுரைப்படி அமைச்சர் பொன்முடியின் உதவியாளரான, விழுப்புரத்தில் உள்ள செல்வராஜ் வீட்டில், இரு வி.ஏ.ஓ.,க்கள் முன்னிலையில் 5 போலீசாருடன் சோதனை செய்தோம்.
அப்போது, வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களும் கைப்பற்ற வில்லை. சோதனை அறிக்கையை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் சமர்பித்து விட்டதாக சாட்சியம் அளித்தார்.
அவரிடம், அமைச்சர் பொன்முடி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பூர்ணிமா, வழக்கின் விசாரணையை மீண்டும் நாளை (இன்று) நடைபெறும் என உத்தரவிட்டார்.

