ADDED : செப் 04, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் கஞ்சி வார்த்தல் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது.
அதனையொட்டி, சிறுகடம்பூர் ஆதிபராசக்தி கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடை அணிந்து கஞ்சி கலயம், தீச்சட்டி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். ஊர்வலத்தை செஞ்சி ஆதிபராசக்தி வழிபாடு மன்ற தலைவர் புவனேஸ்வரி தொடங்கி வைத்தார். மன்ற துணைத் தலைவர் உஷா வரவேற்றார்.
ஊர்வலத்தின் முடிவில் அம்மனுக்கு மகா தீபாராதனையும், கஞ்சி வார்த்தல் மற்றும் அன்னதானம் நடந்தது. நிர்வாகிகள், செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர்.