/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தபால் ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணி: தேர்தல் அலுவலர் ஆய்வு
/
தபால் ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணி: தேர்தல் அலுவலர் ஆய்வு
தபால் ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணி: தேர்தல் அலுவலர் ஆய்வு
தபால் ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணி: தேர்தல் அலுவலர் ஆய்வு
ADDED : ஜூலை 01, 2024 06:21 AM

விழுப்புரம் : இடைத்தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி வீட்டிலிருந்தபடியே ஓட்டளிப்பதற்கான தபால் ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில், தொகுதிக்குட்பட்ட 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விருப்பத்தின் பேரில், வீட்டிலிருந்தபடியே தங்களின் ஓட்டை செலுத்த 2,304 மூத்த குடிமக்கள், 3,473 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 5,777 வாக்காளர்களிடம் 12 டி படிவம் வழங்கி, விருப்பம் கோரப்பட்டது.
இதில், 290 மூத்த குடிமக்கள், 277 மாற்றுத்திறனாளி என மொத்தம் 567 வாக்காளர்கள் வீட்டிலிருந்த படியே ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஓட்டளிப்பதற்கான தபால் ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணி, விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் நடக்கிறது. இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு செய்தார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தமிழரசன், முருகேசன், தனி தாசில்தார் கணேசன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.