ADDED : ஜூன் 26, 2026 03:10 PM
விழுப்புரம்: புதுச்சேரி, நல்லவாடு கிராமத்தில் பவ்டா நிதி மேலாண்மை பயிற்சி அரங்கம் நடந்தது.
பவ்டா நிறுவனம் மற்றும் சாதான் நிறுவனம் இணைந்து நடந்த பயிற்சி அரங்கிற்கு பூர்ணாங்குப்பம் இந்தியன் வங்கி மேலாளர் தயேந்திர திருப்பதி தலைமை தாங்கி, வங்கிகள் மூலம் கடன் பெறுதல். தவணை தவறாமல் திரும்ப செலுத்துதல்.
பண பரிவர்த்தனைகளுக்கு தானியங்கி வங்கி அட்டைகளை பயன்படுத்துதல். பண பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்துதல், வாடிக்கையாளர் தங்களின் தகவல்களை பாதுகாக்கும் வீதம் பற்றி கூறினார்.
பவ்டா திட்டக்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார் உதவி பொது மேலாளர் ராமச்சந்திரன், கடன் பெறும் நிதியை எப்படி பயன்படுத்தி தொழில் வணிக உற்பத்திகள் மூலம் நமது வாழ்வை மேம்படுத்த வேண்டும் என கூறினார்.
பவ்டா குடும்ப நல ஆலோசகர் பாத்திமாபீ வரவேற்றார். சாதான் அமைப்பின் துணைத் தலைவர் கார்த்திக் வாழ்த்திப் பேசினார். பயிற்சியில், 81 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தவளக்குப்பம் கிளை மேலாளர் ஆரோக்கிய டேவிட், களப்பணியாளர்கள் சரளா, திலகவதி, கீர்த்தனா, இளம்வழுதி பங்கேற்றனர்.
துணை பொது மேலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
