/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நலத்திட்ட உதவி அமைச்சர் வழங்கல்
/
நலத்திட்ட உதவி அமைச்சர் வழங்கல்
ADDED : ஆக 12, 2024 05:57 AM

திண்டிவனம்: ஒலக்கூர் பி.டி.ஓ.,அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல பயனாளிக்கு, வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்புச் செல்வன் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் திட்ட விளக்க உரையாற்றினார்.
விழாவிற்கு அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி, 312 பயனாளிகளில், முதல் கட்டமாக 196 பேருக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கான உத்தரவு நகலை வழங்கினார்.
ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணைச் சேர்மன் ராஜாராம், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன், சாரம் ஊராட்சி தலைவர் வனஜா, பி.டி.ஓ., அலுவலக மேலாளர் ஏகாம்பரம் உட்பட பலர் பங்கேற்றனர்.