/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர்களுக்கு பரிசு கலெக்டர் வழங்கல்
/
மாணவர்களுக்கு பரிசு கலெக்டர் வழங்கல்
ADDED : ஆக 04, 2024 12:15 AM

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுதேர்வில் வெற்றி பெற்ற அரசு குழந்தைகள் இல்லம், தன்னார்வ தொண்டு நிறுவன மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு குழந்தைகள் இல்லம், 3 தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் செயல்படும் இல்லங்களில் உள்ள 20 மாணவ, மாணவிகள், பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெற்றனர். இதில், 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த 17 பேருக்கும், பிளஸ் 2 வில் சாதித்த 3 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பரிசு பொருட்களை வழங்கி பேசுகையில், 'பள்ளிக்கல்வியில் தேர்வாவது மட்டுமின்றி, உயர்கல்வியிலும் சிறந்த தேர்ச்சியை பெற வேண்டும்' என்றார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி உட்பட தொண்டு நிறுவன அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.