ADDED : ஜூன் 19, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அலுவலராக கதிரவன் பொறுப்பேற்றார்.
விழுப்புரம் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலராக இருந்த சதீஷ் பெரம்பலுார் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, வேலுார் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணிபுரிந்த கதிரவன் விழுப்புரம் மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டார்.
அவர், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
