/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிளியனுார் கடை வீதி வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை
/
கிளியனுார் கடை வீதி வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை
கிளியனுார் கடை வீதி வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை
கிளியனுார் கடை வீதி வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை
ADDED : மே 10, 2024 01:05 AM
வானுார்: கிளியனுார் கடை வீதி வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து, தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மரக்காணம் அடுத்த பெருமுக்கல் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள், கிரஷர் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்கு, புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் ஜல்லி, கிரஷர் பவுடர்கள் ஏற்றி செல்லப்படுகிறது.
இந்த டிப்பர் வாகனங்கள், கிளியனுார் கடை வீதி வழியாக செல்வதால், அப்பகுதியில் உள்ள கடை மற்றும் வீடுகள் மீது பவுடர்கள் படிகிறது.
இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகக்கூறி அப்பகுதி மக்கள், கடை வீதி வழியாக டிப்பர் லாரிகள் செல்வதற்கு தடை விதிக்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். உடன், மாற்றுப் பாதை வழியாக டிப்பர் லாரிகள் திருப்பி விடப்பட்டது.
நிரந்தரமாக கடை வீதி வழியாக எந்த ஒரு டிப்பர் லாரியும் செல்லக் கூடாது என சாலை மறியல் போராட்டம் அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று வானுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நாராயணமூர்த்தி தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.
இதில், தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி, திண்டிவனம் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் வரும் ஜூன் மாதம் 10ம் தேதி வரை காலியாக செல்லும் கனரக வாகனங்கள் மட்டும், கடை வீதி வழியாக பாதுகாப்புடனும், மெதுவாக செல்ல வேண்டும். கட்டுமானப்பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் அனைத்தும் பைபாஸ் சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கடை வீதி வழியாக கட்டுமானப்பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு, மாற்றுப்பாதை அமைத்து கொடுப்பதற்கு இடம் தேடவும் முடிவு செய்யப்பட்டது.