/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேம்பூண்டி ஊராட்சியில் திட்டப்பணி முதன்மைச் செயலர், கலெக்டர் ஆய்வு
/
வேம்பூண்டி ஊராட்சியில் திட்டப்பணி முதன்மைச் செயலர், கலெக்டர் ஆய்வு
வேம்பூண்டி ஊராட்சியில் திட்டப்பணி முதன்மைச் செயலர், கலெக்டர் ஆய்வு
வேம்பூண்டி ஊராட்சியில் திட்டப்பணி முதன்மைச் செயலர், கலெக்டர் ஆய்வு
ADDED : மே 10, 2024 01:00 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே வேம்பூண்டி கிராமத்தில் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் புதிய குளம் உருவாக்கும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மயிலம் ஊராட்சி ஒன்றியம், வேம்பூண்டி கிராமத்தில் பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், பெலாக்குப்பம் கிராமத்தில், ஊராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளம் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை தமிழ்நாடு அரசின் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா, கலெக்டர் பழனி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாவட்ட ஊரக கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், பெலாக்குப்பம் ஊராட்சி தலைவர் பூங்கா பாக்யராஜ் உடனிருந்தனர்.