ADDED : ஜூன் 30, 2026 08:13 PM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: ஒரத்துாரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மத்திய அரசு நுாறு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒரத்துார் ஊராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணைச் செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை திரும்ப அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய தலைவர் சேகர், நிர்வாகிகள் அமுதா, பால்ராஜ், சுந்தர், நாகலிங்கம், சண்முகம், ஏழுமலை, மாற்றுத்திறனாளி சங்கம் அய்யனார் உட்பட பலர் பங்கேற்றனர்.
