தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கண்டன ஆர்பாட்டம்

கண்டன ஆர்பாட்டம்

கண்டன ஆர்பாட்டம்


ADDED : ஆக 10, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி., பட்டியிலில் சேர்க்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் நகராட்சி திடலில், புதுவை – கடலுார் உயர் மறைமாவட்ட எஸ்.சி., – எஸ்.டி., பணிக்குழு சார்பில் நடந்த ஆர்பாட்டத்திற்கு, பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கினார். பணிக்குழு செயலாளர் தெய்வநாயகம் துவக்கி வைத்தார்.

முதன்மை குரு குழந்தைசாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் பிலோமின்தாஸ், தேவசகாயராஜ், சாமிநாதன், அருளானந்தம் உள்ளிட்டோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். வி.சி.., பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி., பட்டியலில் சேர்க்கவும், அதற்காக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். நீதியரசர் ரங்கநாத்மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us