/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மினரல் வாட்டர் கம்பெனிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
/
மினரல் வாட்டர் கம்பெனிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மினரல் வாட்டர் கம்பெனிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மினரல் வாட்டர் கம்பெனிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
ADDED : மே 28, 2024 05:53 AM

திண்டிவனம் : திண்டிவனம் 10வது வார்டில் தனியார் மினரல் வாட்டர் கம்பெனி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மா.கம்யூ.,கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
திண்டிவனம் 10வது வார்டு ராமதாஸ் நகரில் தனியார் மினரல் வாட்டர் கம்பெனிக்கு கொடுத்து அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, நேற்று காலை டி.வி.நகர் பகுதியில் மா.கம்யூ.,கட்சி சார்பில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது.மா.கம்யூ.,நகர செயலாளர் குமரேசன் தலைமை தங்கினார்.இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,ராமமூர்த்தி, மா.கம்யூ.,மாவட்ட செயலாளர் சுப்பரமணியன், நிர்வாகிகள் அறிவழகன், வட்ட செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் கண்டன உரயைாற்றினர். தொடர்ந்து கட்சி சார்பில் டி.வி.நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.