/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கல்
/
இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கல்
ADDED : ஆக 04, 2024 11:34 PM

விழுப்புரம்: விழுப்புரத்தைச் சேர்ந்த மறைந்த காவலர் குடும்பத்திற்கு 24 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் அடுத்த கரடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம், காவல்துறையில் பணியாற்றி வந்தார். இவரது மறைவைத் தொடர்ந்து, 2009ம் ஆண்டு பேட்ச் காவல்துறை 'உதவும் அன்பு உள்ளங்கள் குழு' சார்பில், சுந்தரம் குடும்பத்தினருக்கான நிதி உதவியாக 24 லட்சத்து 5,804 ரூபாய் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை, மாநில குழுவின் ஒருங்கிணைப்பாளர் தலைமைக் காவலர் பரமசிவன் மேற்பார்வையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர்கள் செங்கல்வராயன், சிவபாண்டியன், உதயகதிரவன், மேகநாதன் ஆகியோர் செய்திருந்தனர். தற்போது வரை உதவும் அன்பு உள்ளங்கள் குழுவின் மூலம் 6 கோடியே 38 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.