/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 10, 2025 10:05 PM

விழுப்புரம்: விழுப்புரம் குருசுபராஜபதி இளைஞர், மாணவர் கல்வி ஆரோக்கிய நல வாழ்வு அறக்கட்டளை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் பழைய பஸ்நிலையம் எதிரில் நடைபெற்ற விழாவிற்கு, அ.தி.மு.க., தெற்கு நகர செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். குருசுபராஜபதி பிறந்த நாள் விழாவையொட்டி, ஒரு மாணவிக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை, 100 மாணவ, மாணவிகளுக்கு உடைகள், கல்வி நிதி,நோட்டு புத்தகம், உணவு உள்ளிட்ட உதவிகளை, நியூஸ்-ஜெ நிர்வாக இயக்குநர் சி.வி.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், ராமதாஸ், சுரேஷ்பாபு, பேட்டை முருகன், பன்னீர், முகுந்தன், வடக்கு நகர செயலாளர் ராமதாஸ், துணை செயலாளர் வழக்கறிஞர் செந்தில், பால்ராஜ், கவுன்சிலர்கள் ஆவின் செல்வம், கோதண்டம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அ.தி.மு.க., மாவட்ட பேரவை இணை செயலாளர் கவுன்சிலர் கலை, பேரவை நகர செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் செந்தில்வேலன், நகர வர்த்தக அணி செயலாளர் ரகுராமன், வார்டு செயலாளர்கள் லோகநாதன், பாஸ்கர், விக்ரம், நகர எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் ஜெயவேல், இளைஞர் பாசறை செயலாளர் நீலமேகம், வழக்கறிஞர் வேலவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.