/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கல்
/
நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கல்
நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கல்
நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஆக 08, 2024 11:15 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தின் சார்பில், நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பழனி நாட்டுப்புற கலைஞர்களுக்கு கல்வி உதவித்தொகை, மூக்கு கண்ணாடி வாங்க உதவித்தொகை, இயற்கையில் உயிர் நீத்த கலைஞர்களுக்கு நிவாரணம், திருமண உதவித்தொகை என்று, மொத்தம் 17 பேருக்கு 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, கூடுதல் எஸ்.பி., திருமால், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற நிர்வாகக்குழு உறுப்பினர், தேசிய விருதாளர் சத்தியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.