/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கல்
/
பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கல்
ADDED : ஜூலை 21, 2024 07:48 AM

செஞ்சி: கணக்கன்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழக அரசு, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வங்கி வருகிறது. அதன்படி செஞ்சி ஒன்றியம், கணக்கன்குப்பம் அரசு நடுநிலை பள்ளியில் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா நடந்தது.
டி.இ.ஓ., செல்வகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சையத் இஸ்மாயில் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினியை வழங்கி பேசினார்.
ஒன்றிய செயலாளர் விஜயராகவன், கவுன்சிலர்கள் ஞானாம்பாள் பஞ்சமூர்த்தி, ஊராட்சி தலைவர்கள் சுலோசனா, தாட்சாயணி கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், ஏ.இ.ஓ., புருஷோத்தமன், மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியர்கள், ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.