/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பி.டி.ஓ., அலுவலக கட்டுமான பணி கூடுதல் கலெக்டர் ஆய்வு
/
பி.டி.ஓ., அலுவலக கட்டுமான பணி கூடுதல் கலெக்டர் ஆய்வு
பி.டி.ஓ., அலுவலக கட்டுமான பணி கூடுதல் கலெக்டர் ஆய்வு
பி.டி.ஓ., அலுவலக கட்டுமான பணி கூடுதல் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 27, 2024 11:48 PM

வானுார்: புதிதாக கட்டப்பட்டு வரும் வானுார் பி.டி.ஓ., அலுவலக கட்டுமானப் பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்த பழமையான பி.டி.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்து விட்டு 3 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக அலுவலக கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 60 சதவீதம் முடிந்து இறுதிக்கட்டபணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்பணிகளை, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தற்போது பி.டி.ஓ., அலுவலகம் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வருவதால், புதிய கட்டடத்தை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து பி.டி.ஓ., அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், கிடப்பில் உள்ள பணிகள் குறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் பெருமாள், வானுார் பி.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.