/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆசிரியர்கள் பணியிட மாற்றம் பள்ளி முன் பொதுமக்கள் முற்றுகை
/
ஆசிரியர்கள் பணியிட மாற்றம் பள்ளி முன் பொதுமக்கள் முற்றுகை
ஆசிரியர்கள் பணியிட மாற்றம் பள்ளி முன் பொதுமக்கள் முற்றுகை
ஆசிரியர்கள் பணியிட மாற்றம் பள்ளி முன் பொதுமக்கள் முற்றுகை
ADDED : ஜூலை 19, 2024 05:03 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி அரசு பள்ளி ஆசிரியர்களின் பணியிட மாறுதலை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுமக்கள் பள்ளி முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி அடுத்த தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் 9 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில், ஆசிரியர்கள் சண்முகம், ஆசிரியைகள் ஜீவா, அனுசுயா ஆகியோர் சுய விருப்பத்தின் பேரில் பணியிட மாறுதல் பெற்றுச் சென்றனர்.
இதனையறிந்த மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களான தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காலை 9:00 மணியளவில் பள்ளி வளாகத்தில் எதிரே முற்றுகையிட்டு, ஆசிரியர்களின் பணியிடமாறுதலை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, வட்டார கல்வி அலுவலர் ஜெயசங்கர் ஆகியோர் நேரில் சென்று, முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்களில் ஒருவரான ஜீவா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் சுய விருப்பத்தின் பேரில் சென்றதாகவும், தாங்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் இப்பள்ளியில் பணியில் சேருவதாக கூறினார். அதன்பேரில், பொதுமக்கள் அனைவரும் சமாதானமாகி 11:00 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.