/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எல்லீஸ்சத்திரம் ரோடு மேம்பால பணி மந்தம் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
/
எல்லீஸ்சத்திரம் ரோடு மேம்பால பணி மந்தம் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
எல்லீஸ்சத்திரம் ரோடு மேம்பால பணி மந்தம் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
எல்லீஸ்சத்திரம் ரோடு மேம்பால பணி மந்தம் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 30, 2024 06:13 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் பைபாசில் எல்லீஸ்சத்திரம் ரோடு சந்திப்பில் மந்தமாக நடைபெறும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள மேம்பாலங்களை ஏற்படுத்தி வருகிறது. விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் ரோடு சந்திப்பில் பைபாசில் 27 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கியது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த அப்பு கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்தினர் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக அப்பகுதியில் வாகனங்கள் எளிதாகச் செல்ல சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாத இறுதியில் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. இரு புறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணியாலும், மேம்பாலம் அமைக்க தேவையான கிராவல் மண் சேகரிக்கும் பணி காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் நகாய் திட்ட இயக்குனர் வரதராஜன் மேம்பாலம் பணியை பார்வையிட்டு ஒப்பந்ததாரருக்கு பணியை ஜூலை மாத இறுதிக்குள் விரைந்து முடிக்க உத்தரவிட்டு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது, திருச்சி - சென்னை சாலையில் ஒரு பகுதி மேம்பாலம் அமைக்கப்பட்டு , மண் கொட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரும் வாரங்களில் சென்னை - திருச்சி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியை துவங்க உள்ளனர்.
மேம்பாலம் பணியை விரைந்து முடித்திட வேண்டும் என பொதுமக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.

