/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடியிருப்புக்கு மத்தியில் மொபைல் போன் டவர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

ADDED : மே 31, 2024 02:44 AM

விழுப்புரம்: குடியிருப்புக்கு மத்தியில் மொபைல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விக்கிரவாண்டி அடுத்த விராட்டிக்குப்பம் ஊராட்சி, ஈச்சங்காடு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மனு விபரம்:
ஈச்சங்காடு கிராமத்தில் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மத்தியில் உள்ள ஞானசேகர் என்பவரது காலி இடத்தில், தனியார் மொபைல் போன் நிறுவனத்தின் சார்பில் டவர் அமைக்க கட்டுமானப் பணியை தொடங்கினர்.
நாங்கள் விசாரித்தபோது, மீன் வளர்ப்பு குட்டை என்றனர். அதன் பிறகு மொபைல் போன் டவர் என்பதால், பொதுமக்கள் மறித்ததும் பணியை நிறுத்தி விட்டனர். இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் வந்து விசாரித்துவிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்குமாறு தெரிவித்தனர்.
எங்கள் ஊரில், குடியிருப்புக்கு மத்தியில் மொபைல் போன் டவர் அமைக்கக் கூடாது என, கடந்த ஜனவரி 26ம் தேதி, ஊராட்சி தலைவர் முன்னிலையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, மீண்டும் அந்த இடத்தில் கடந்த வாரம் தனியார் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அங்கு டவர் அமைத்தால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும். இதனால், குடியிருப்பு வெளியே டவர் திட்டத்தை மாற்றி அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.