/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய, மாநில அரசுகளின் வேளாண் திட்டங்கள் குறித்த கையேடு வெளியீடு
/
மத்திய, மாநில அரசுகளின் வேளாண் திட்டங்கள் குறித்த கையேடு வெளியீடு
மத்திய, மாநில அரசுகளின் வேளாண் திட்டங்கள் குறித்த கையேடு வெளியீடு
மத்திய, மாநில அரசுகளின் வேளாண் திட்டங்கள் குறித்த கையேடு வெளியீடு
ADDED : செப் 01, 2024 11:11 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், வேளாண்துறை சார்பில் இந்தாண்டு செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த கையேடு வெளியிடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், வேளாண், கால்நடை உள்ளிட்ட முக்கிய துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை குறிப்பிடவும், அது குறித்த கையேடுகளை ஆண்டு தோறும் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு 2024-25ம் ஆண்டில் வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்த கையேடு புத்தகமாக விழுப்புரத்தில் வெளியிடப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் பழனி கையேட்டினை வெளியிட்டார். விவசாய பிரதிநிதிகள் அதனை பெற்றுக்கொண்டனர்.
மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம், பிரதமரின் விவசாய ஊக்க நிதி திட்டம் என திட்டங்கள், பயன்கள், வழிமுறைகள் குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளனர்.