/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் வாய்க்கால் துார்வாரும் பணி
/
புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் வாய்க்கால் துார்வாரும் பணி
புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் வாய்க்கால் துார்வாரும் பணி
புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் வாய்க்கால் துார்வாரும் பணி
ADDED : செப் 11, 2024 01:18 AM

வானுார், : புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் பருவமழையையொட்டி, ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் வாய்க்கால் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. குறிப்பாக வெளி மாநில வாகனங்கள் ஏராளமாக கடந்து செல்கிறது.
இந்த சாலையோரம், மழைக் காலங்களில் தண்ணீர் தடம்புரண்டோடும் வகையில் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் வழியாக தண்ணீர் கழிவெளிக்குச் செல்லும்.
தற்போது, பைபாஸ் சாலையோரம் இருக்கும் வாய்க்கால்கள் முழுதும், செடிகள் வளர்ந்து புதர் மண்டி வாய்க்கால் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு மறைந்தது.
இதனால் மழைக் காலங்களில் மழைநீர் தடையின்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது விரைவில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால் பட்டானுார் டோல்கேட் நிர்வாகத்தின் சார்பில், சாலையோரத்தில் உள்ள வாய்க்கால்களை துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கோரிமேடு எல்லையில் துவங்கிய இந்த பணி தற்போது, புளிச்சப்பள்ளம் வரை முடிந்துள்ளது. எஞ்சிய வாய்க்கால் துார்வாரும் பணிகளும் விரைந்து முடிக்கப்படும் என டோல்கேட் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.