/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்டுடியோவில் கேமரா திருடிய புதுச்சேரி வாலிபர் கைது
/
ஸ்டுடியோவில் கேமரா திருடிய புதுச்சேரி வாலிபர் கைது
ஸ்டுடியோவில் கேமரா திருடிய புதுச்சேரி வாலிபர் கைது
ஸ்டுடியோவில் கேமரா திருடிய புதுச்சேரி வாலிபர் கைது
ADDED : ஜூலை 24, 2024 06:26 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் போட்டோ ஸ்டுடியோவில் கேமராக்கள் திருடிய புதுச்சேரி வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார் நேற்று மரக்காணம் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி பல்சர் பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதில் அவர், புதுச்சேரி, ஜீவானந்தம் நகர், திருப்பூர் குமரன் வீதி திருநாவுக்கரசு மகன் ஆகாஷ், 30; என்பதும், இவர் கடந்த 17ம் தேதி திண்டிவனம்- மரக்காணம் சாலையில், கிடங்கல் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் ஸ்டுடியோவில் இருந்த விலை உயர்ந்த கேமராக்களை திருடியவர் என்பது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆகாஷை கைது செய்தனர்.
மேலும், அவர் திருடிய கேமராக்கள் மற்றும் அவர் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.