/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரி சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது
/
புதுச்சேரி சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது
ADDED : மே 29, 2024 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : கிளியனுார் அருகே சாராயம் விற்ற புதுச்சேரி வாலிபர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
வானுார் அடுத்த கொந்தமூர் அரசு பள்ளி அருகே கடந்த மாதம் 6ம் தேதி சாராயம் விற்ற புதுச்சேரி காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த பரசுராமன் மகன் சூர்யா,24; என்பவரை கிளியனுார் போலீசார் கைது செயதனர்.
இவர் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளதால், இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., தீபக் சிவாச் பரிந்துரையை ஏற்று, சூர்யாவை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
அதன்பேரில், சூர்யா கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.