/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரி சாராயம் குடித்த மேலும் ஒருவர் 'அட்மிட்'
/
புதுச்சேரி சாராயம் குடித்த மேலும் ஒருவர் 'அட்மிட்'
புதுச்சேரி சாராயம் குடித்த மேலும் ஒருவர் 'அட்மிட்'
புதுச்சேரி சாராயம் குடித்த மேலும் ஒருவர் 'அட்மிட்'
ADDED : ஜூலை 11, 2024 06:33 AM

விக்கிரவாண்டி, : புதுச்சேரி சாராயம் குடித்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அதனையொட்டி கடந்த 8ம் தேதி மாலை முதல் மதுபான கடைகள் மூடப்பட்டன. இதனால், தொகுதியை சேர்ந்த குடிப்பிரியர்கள் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்திற்கு சென்று மது அருந்தினர்.
அவ்வாறு விக்கிரவாண்டி அடுத்த வேம்பி மதுரா பூரி குடிசை கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சக்திவேல்,52: பிரபு,35: ஆகிய இருவரும் கடந்த 8ம் தேதி புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு சென்று அங்கிருந்து சாராயம் வாங்கி வந்து தங்கள் ஊரைச் சேர்ந்த ராஜா,37: சுரேஷ்பாபு,36: பிரகாஷ்,38: காளிங்கராஜ்,47; ஆகியோருடன் சேர்ந்து குடித்தனர்.
அன்று இரவு 6 பேருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று காலை அதே ஊரைச் சேர்ந்த மணி,52: என்பவர் புதுச்சேரி சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர்களில் 5 பேர் குணமடைந்ததால், நேற்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பிரகாஷ், மணி ஆகியோருக்கு மஞ்சள்காமாலை உள்ளதால், இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கஞ்சனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.