/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேம்பாலத்தின் கீழே மழை நீர் தேக்கம்
/
மேம்பாலத்தின் கீழே மழை நீர் தேக்கம்
ADDED : மே 23, 2024 10:38 PM

மயிலம்: கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழே மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை கூட்டேரிப்பட்டு பகுதியில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த பாலத்திற்கு கீழே வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையில் லேசான மழைக்குகூட தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது.
மேலும் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்பதால் தார் சாலை விரைவில் குண்டும் குழியுமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்தி மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.