/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராஜயோக தியான நிலையம்திருமூர்த்தி சிவஜெயந்தி விழா
/
ராஜயோக தியான நிலையம்திருமூர்த்தி சிவஜெயந்தி விழா
ADDED : பிப் 27, 2025 07:45 AM

விழுப்புரம், ;வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில் மகா சிவராத்திரியையொட்டி 89 வது திருமூர்த்தி சிவஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நேற்று காலை சிவபரமாத்மா கொடியேற்றப்பட்டது. இதில், மடத்தார் தாண்டவமூர்த்தி சிவாச்சாரியார் பங்கேற்றார். பின், சிறப்பு தியானம், ஞானஉபதேசம் நடந்தது. தொடர்ந்து ராஜயோக தியான பயிற்சி கற்றுத்தரப்பட்டது.
மாலை 5.00 மணிக்கு நடந்த அமைதி ஊர்வலத்தை லட்சுமணன் எம்.எல்.ஏ., தி.மு.க., நகர செயலாளர் ஜீவா, வழக்கறிஞர் சுரேஷ் , டாக்டர் சுந்தரமூர்த்தி, தொழிலதிபர் சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதில், பிரம்மாகுமாரர்கள், பிரம்மாகுமாரிகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் வளவனுாரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஜெகன்நாதீஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. பின், கோவில் உட்பிரகாரத்தில் ஆன்மிக படவிளக்க காட்சி மூலம் மகா சிவராத்திரி படவிளக்கம் காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுளை, நிர்வாகி செல்வமுத்துகுமரன் செய்திருந்தார்.

