/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
/
ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
ADDED : மே 08, 2024 11:51 PM
விழுப்புரம் : தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். செயலாளர் சம்பத், பொருளாளர் ரஷீத் முன்னிலை வகித்தனர். துணை தலைவர்கள் பழனிவேல், தட்சணாமூர்த்தி, ஜெகதீஸ்வரன், இணை செயலாளர்கள் குணசேகரன், தசரதன், கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களாக பொட்டலங்களில் வழங்கப்பட வேண்டும். அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளில் எடை தராசு மற்றும் நடமாட்ட பணியாளர் வர வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தி வரும் 10ம் தேதி விழுப்புரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல அலுவலகம் முன் காலை 11:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.