/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட ஊராட்சி அலுவலகம் புதுப்பிக்கும் பணி
/
மாவட்ட ஊராட்சி அலுவலகம் புதுப்பிக்கும் பணி
ADDED : ஆக 08, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஊராட்சி அலுவலகம் தனி கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்த கட்டடம் புதுப்பிக்கும் பணி 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடக்கிறது.
இந்த பணிகளை கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் அருண் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.