/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா மீண்டும் பழுது: மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்
/
விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா மீண்டும் பழுது: மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்
விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா மீண்டும் பழுது: மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்
விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா மீண்டும் பழுது: மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்
ADDED : மே 09, 2024 04:36 AM

விழுப்புரம் : விழுப்புரம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் மழையால் பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்கள் 35 நிமிடங்களில் சரி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி தெரிவித்தார்.
விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரம் அரசு கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இங்கு 'ஸ்ட்ராங் ரூமில்' உள்ள 8 கண்காணிப்பு கேமராக்கள் நேற்று காலை பெய்த திடீர் மழையின்போது பழுதாகின. இதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி முன்னிலையில் சரி செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி, கூறியதாவது,
விழுப்புரத்தில் இன்று (நேற்று) காலை 7:00 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால், ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள 8 கண்காணிப்பு கேமராக்கள் 7:28 மணி முதல் 8.05 மணி வரை பழுதாகின. இது 35 நிமிடங்களில் சரி செய்யப்பட்டது.
இங்கு மொத்தம் 314 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் ரூமில் 12 முதல் 20 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் பழுதால் திண்டிவனம், விழுப்புரம் சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள ரூமில் ரெக்கார்டிங் பதிவு இல்லை. மற்ற கேமராக்களில் ரெக்கார்டிங் ஆகியுள்ளது.
மழை, இடியால் இந்த பழுது ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பு கேமராக்கள் பராமரிப்போர் கூறுகின்றனர். இதில் ஏதும் பாதிப்பில்லை. ஸ்ட்ராங் ரூமை சுற்றிலும் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்
தகவலறிந்த வி.சி., வேட்பாளர் ரவிக்குமார், ஓட்டு எண்ணும் மையத்தில் சென்று பார்வையிட்டார். பின், அவர் கூறியதாவது;
திண்டிவனம், விழுப்புரம் சட்டசபை தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையிலிருந்த கண்காணிப்பு கேமராக்கள் இடியால் மின்தடை ஏற்பட்டு பழுதாகி, உடனே சரி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இரண்டாம் முறையாக கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் தெரிவிப்போம்' என்றார்.
அ.தி.மு.க., வேட்பாளர் பாக்கியராஜ் தரப்பில் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., கூறுகையில், ''ஓட்டு எண்ணும் மையத்தில் ஸ்ட்ராங் ரூம் பூட்டு தரமில்லாததாக உள்ளது.
கண்காணிப்பு கேமரா பொருத்தும் டெண்டர் தரமற்ற நிறுவனத்திற்கு விடப்பட்டதால் எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. கட்சியின் தலைமைக்கு இத்தகவலை கொண்டு செல்வோம்' என்றார்.