/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது மேல்மலையனுாரில் தாமதம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது மேல்மலையனுாரில் தாமதம்
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது மேல்மலையனுாரில் தாமதம்
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது மேல்மலையனுாரில் தாமதம்
ADDED : ஏப் 20, 2024 05:58 AM
அவலுார்பேட்டை, : மேல்மலையனுார் பகுதியில் நடந்த லோக்சபா தேர்தலில் சில இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் காலதாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
மேல்மலையனுார் அடுத்த செவலபுரை ஊராட்சி தாதிகுளம் கிராமத்தில் பூத் எண்.115ல் ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு இணைக்கப்படும் கேபிள் பழுதடைந்ததால், ஒரு மணி நேரத்திற்கு பிறகு பழுது நீக்கி ஒட்டு பதிவு துவங்கியது.
இதே போல் சிறுதலைப்பூண்டி கிராமத்தில் 67வது பூத்தில், 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கிய 30 நிமிடத்தில் இயந்திரம் பழுதானது. ஒரு மணி நேரத்திற்கு பின் பழுது நீக்கி ஓட்டுப்பதிவு நடந்தது.
வடுகப்பூண்டி கிராமத்தில் 74வது பூத்தில், இயந்திரம் பழுதானதால் 30 நிமிடம் காலதாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.