/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரோவில்லில் 13 நாடுகளின் பிரதிநிதிகள் ஆய்வு
/
ஆரோவில்லில் 13 நாடுகளின் பிரதிநிதிகள் ஆய்வு
ADDED : பிப் 22, 2025 03:09 AM

வானுார்: ஆரோவில்லில் 13 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் இந்தோனேஷியா, மொரீஷியஸ், நைஜீரியா, ஜிம்பாப்வே, எத்ரியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று ஆரோவில் பகுதியை பார்வையிடவும், ஆய்வு செய்யவும்வருகை தந்தனர்.
இங்கு அவர்கள், ஸ்ரீ அரபிந்தோ சர்வதேச கல்வி ஆராய்ச்சி நிறுவனம், ஸ்வரம் இசை மையம், மெழுகுவர்த்தி தொழிற்சாலை, தோல் பைகள் தயாரிப்பு நிறுவனங்களைபார்வையிட்டனர்.
அவர்களிடம் ஆரோவில் நகர வளர்ச்சி மன்ற உறுப்பினர்களான சிந்துஜா, அந்திம், பணிக்குழு நிர்வாகி அருண் ஆகியோர் ஆரோவில்லில் நோக்கம், செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி தலைமையில் எடுக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள், கிரவுன் சாலை, மாத்ரி மந்திர் சுற்றி ஏரிஅமைக்கும் பணிகள் குறித்து நிர்வாக அலுவலர்சீத்தராமன் விளக்கினார்.
மேலும், ஆரோவில் குறித்த உலகளவில் எடுத்துரைக்கவும், தன்னார்வ திட்டங்களில் பங்கேற்கவும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.