தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை

தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை

தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை


ADDED : ஜூன் 17, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 10:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:  கல்வித்துறையில் கடந்த 2012க்கு முன்பு சேர்ந்த ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென, தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, அக்கூட்டணியின் மாநில பொதுச்செயலர் செல்லையா, தமிழக முதல்வர், கல்வி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்க மனு: தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், கடந்த 16.12.2012க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 2001 NCTE விதிகளின் படி, அரசின் நியமன விதிகளின் படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணியில் தொடரவும், பதவி உயர்வுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, விலக்கு அளிக்கும் வகையில், கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகள்படி சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கட்டாய தகுதித் தேர்வு நிலை ஏற்பட்டால், அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வுக்கு 40சதவீதம் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்ய வேண்டும். ஏற்கனவே 20 ஆண்டுகள் மேலாக பணியாற்றி கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு, பணி காலத்திற்கேற்ப சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும்.

தமிழக அரசு தற்போது, ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு ஜூலை 4,5ம் தேதியில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us