/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க கூடாது ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
/
உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க கூடாது ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க கூடாது ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க கூடாது ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
ADDED : மே 24, 2024 05:43 AM

வானுார்: உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க அரசு முயற்சித்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர வானுார் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதவி காலம் முடிவடைகிறது. கடந்த ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாத விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு தாமதமாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
இந்த மாவட்டங்களில் பதவி காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், வானுார் ஊராட்சி ஒன்றிய தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம் நேற்று திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்தது.
ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் தனபால் ராஜ் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு துணைத் தலைவர் வெங்கடேசன், பொருளாளர் உதயகுமார், செயலாளர் தசதரன், ஒருங்கிணைப்பாளர் சிவா முன்னிலை வகித்தனர். அனைத்து ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் மாவோ சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 5 ஆண்டுகள் பதவி காலம் முடிவடையாத நிலையில் உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து தேர்தல் நடத்துவது என்ற முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். தேர்தல் நடத்துவதை மறு பரிசீலனை செய்யாத நிலையில், நீதிமன்ற வழக்கு தொடர்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.