/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தியாகிகள் நினைவு துாணுக்கு மரியாதை
/
தியாகிகள் நினைவு துாணுக்கு மரியாதை
ADDED : ஆக 17, 2024 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தியாகிகள் நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்தியாவின் 78 வது சுதந்திர தின விழாவையொட்டி, திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தியாகிகள் நினைவுத்தூணுக்கு, பாரத் இளைஞர் அறக்கட்டளை சார்பாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பாரத் இளைஞர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் தினேஷ்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

