ADDED : ஜூலை 02, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வானுார் வட்ட கிளை சார்பில் வருவாய் தினம் கொண்டாடப்பட்டது.
தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்ட தலைவர் கவுதமன் தலைமை தாங்கி, சங்க கொடியேற்றி வைத்து பேசினார். முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் வெங்கடபதி, கிளைச் செயலர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகளுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கினர். வட்ட செயலாளர் பார்த்திபன் நன்றி கூறினார்.