/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் விழுப்புரத்தில் விபத்து அபாயம்
/
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் விழுப்புரத்தில் விபத்து அபாயம்
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் விழுப்புரத்தில் விபத்து அபாயம்
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் விழுப்புரத்தில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 02, 2024 06:17 AM

விழுப்புரம்: விழுப்புரம் திருச்சி சாலையில், கலெக்டர் அலுவலகம் அருகே சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனகளால் விபத்து ஏற்படும் நிலை தொடர்கிறது.
விழுப்புரம் திருச்சி சாலையில், கலெக்டர் அலுவலக வாயில் ஆர்ச் பகுதியிலிருந்து நீண்ட தொலைவுக்கு பெட்ரோல் பங்க் வரை கடைகளுக்கு முன்பு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.
குறிப்பாக காலை, மாலை நேரங்களில், அதிகளவில் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாய நிலை தொடர்ந்து வருகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 100க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள், கடைகளுக்கு முன்பு நிறுத்தப்படுகிறது.
இந்த வாகனங்கள் பெரும்பாலும் சாலை வரை ஆக்கிரமித்தே நிறுத்தப்படுதவால், கலெக்டர் அலுவலக ஆர்ச் பகுதி எதிரே தொடங்கி, பெட்ரோல் பங்க் வரை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த விதிமீறிய வாகனங்கள் நிறுத்துவதை கண்டுகொள்ளாமல் விடுவதால், இப்போது, வாகனங்களை நிறுத்திவிட்டு, பொழுது போக்கு இடம் போல் நின்று பலர் பேசிக்கொண்டுள்ளனர். அதே போல், இடதுபுறமுள்ள 2 பெட்ரோல் பங்கிற்கு வரும் வாகனங்களும், எதிர்திசையில் செல்வதால், நெரிசல் நிலை ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்து, வசதி ஏற்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், இது போன்ற வாகனங்கள் சாலை வரை ஆக்கிரமித்துள்ளதால், விபத்து நேரிடும் ஆபத்தான நிலை உள்ளது. போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.