ADDED : ஜூலை 17, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: வளவனுார் அருகே 100 நாள் வேலைத் திட்டத்தை வலியுறுத்தி கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வளவனுார் அடுத்த மாத்துார்பாளையம் கிராமத்தில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில், திடீரென மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் பணி ஒதுக்கப்பட்டதாகக் கூறி, அந்த கிராம மக்கள் 50 பேர், நேற்று காலை 8:15 மணிக்கு, கிராம சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வளவனுார் போலீசார் மற்றும் கண்டமங்கலம் பி.டி.ஓ., சிவக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று 8:30 மணிக்கு மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
