ADDED : மார் 07, 2025 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆகிரமிப்புகளை நகாய் பணியாளர்கள் அகற்றம் செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான மயிலம் ரோட்டில் ஏராளமானவர்கள் சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்திருந்தனர். இப்பகுதியில் பயணிகள் நிற்பதற்கும், பஸ்சில் ஏறவும், இறக்குவதற்கு அவதியடைந்தனர். இந்நிலையில், நகாய் நிறுவன தொழிலாளர்கள் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை, ஜே.சி.பி., மூலம் அகற்றி, சாலையை சரிசெய்தனர். மயிலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.