/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகை, பணம் கொள்ளை வானுார் அருகே துணிகரம்
/
நகை, பணம் கொள்ளை வானுார் அருகே துணிகரம்
ADDED : மார் 03, 2025 04:30 AM
வானுார் : வானுார் அருகே வீட்டின் பீரோவில் இருந்த 4.68 லட்சம் ரூபாய் மற்றும் 11 சவரன் நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வானுார் அடுத்த இரும்பை மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி கோவிந்தம்மாள், 54; இவர், தனது பீரோவில் 4 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மற்றும் 11 சரவன் நகைகள் வைத்திருந்தார்.
கடந்த மாதம் 27ம் தேதி பீரோவை திறந்து பார்த்தபோது, பணம் மற்றும் நகை இருந்துள்ளது. ஆனால், நேற்று பீரோவை திறந்து பார்த்தபோது, நகை மற்றும் பணத்தை காணவில்லை. வீட்டில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து மர்ம நபர் நகைளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின்பேரில், ஆரோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.