sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிரிக்கெட் மைதானத்தை சீரமைக்க ரோலர் தயார் நாங்கள் 'ரெடி', வாலிபர்கள் 'ஆர்வம்'

/

கிரிக்கெட் மைதானத்தை சீரமைக்க ரோலர் தயார் நாங்கள் 'ரெடி', வாலிபர்கள் 'ஆர்வம்'

கிரிக்கெட் மைதானத்தை சீரமைக்க ரோலர் தயார் நாங்கள் 'ரெடி', வாலிபர்கள் 'ஆர்வம்'

கிரிக்கெட் மைதானத்தை சீரமைக்க ரோலர் தயார் நாங்கள் 'ரெடி', வாலிபர்கள் 'ஆர்வம்'


ADDED : ஜூலை 11, 2024 04:25 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார், : வானுார் அருகே ஆயிரம் கிலோ எடை கொண்ட ரோலரை தயாரித்து, சாதாரண கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் ஆடுகளத்தை சீரமைத்து கிரிக்கெட் அணியினர் அசத்தி வருகின்றனர்.

உலகத்தில் கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் நாளுக்குள் நாள் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. சின்னஞ்சிறு வயதில் இருந்தே பலர் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டுள்ளனர். பிளாஸ்டிக் பந்தில் துவங்கி ரப்பர், கார்க் பால், கிரிக்கெட் பால் என விதவிதமான பந்துகளில் கிரிக்கெட் விளையாட்டு பலரின் ஆர்வலத்தை தூண்டி வருகிறது.

கிரிக்கெட் அணி இல்லாத கிராமங்களே கிடையாது. ஆனால் அந்த அணிகளுக்கு போதுமான விளையாட்டு மைதானம் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. இப்படி மைதானம் இல்லாத கிராமங்களில், ஏரி மற்றும் விவசாய செய்யாத நிலங்களை தேர்வு செய்து கிரிக்கெட் மைதானம் அமைத்துகொள்கின்றனர். ஆனால் கிரிக்கெட்டில், ஆடுகளம் என்பது மிக முக்கியமான ஒன்று. ஒவ்வொரு ஆடுகளமும், பேட்டிங் டிராக், வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்து விடும். நகரப்பகுதிகளில் ஒரு சில கிரிக்கெட் மைதானத்தில் 'மேட்' அமைத்து விடுவதால் பந்து வீச்சாளர்களுக்கும், பேட் செய்பவர்களுக்கும் சுலபமாக உள்ளது.

ஆனால் கிராமப்புறங்களில் உள்ள கிரிக்கெட் அணிகள், தங்களது கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளத்தில் பந்து துள்ளுவது என்பது கேள்விக்குறி. இதனால் பந்து வீசுபவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆடுகளத்தை (பிட்ச்) சீரமைக்க ரோலர் உருவாக்கியுள்ளனர்.

வானுார் அடுத்த துருவை, ராயப்பேட்டை மற்றும் இதையொட்டியுள்ள புதுச்சேரி மாநிலமான சஞ்சீவிநகர், ஆலங்குப்பம், அன்னை நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிரிக்கெட் அணியினர், தங்களது அமைத்துள்ள கிரிக்கெட் மைதானத்தில், ஆடுகளத்தில், 800 கிலோ முதல் 1000 கிலோ எடை உள்ள ரோலரை தயார் செய்து ஆடுகளத்தை சீரமைத்து பராமரித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் ஒரு கிராமம் சார்பில் கிரிக்கெட் தொடர் நடத்துகிறது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 25 கிராமங்களை சேர்ந்த கிரிக்கெட் அணியினர் பங்கு கொள்கின்றனர். இவர்களுக்கு சிறந்த முறையில் ஆடுகளத்தை வழங்குவதற்காக, தொடர் நடத்தும் அணியினர், ரோலர் மூலம் ஆடுகளத்தை சீரமைத்து கொடுக்கின்றனர்.

கிரிக்கெட் போட்டி துவங்கும் முதல் நாள் மாலையே ஆடுகளத்தில் சாணம் கலந்த தண்ணீரை ஊற்றி, ரோலரை உருட்டுகின்றனர். பின் அதன் மீது மரத்துகள்களை வீசி, பலமுறை ரோலரை உருட்டி, ஆடுகளத்தை ஒப்படைக்கின்றனர்.

இதுகுறித்து, கிரிக்கெட் வீரர் சிவஞானம் கூறுகையில், 'இந்த ரோலர் மூலம் ஆடுகளத்தை சீரமைப்பதால், விளையாடுவதற்கு சுலபமாக உள்ளது. ஆடுகளம் வறட்சியை உறுதி செய்வதோடு, நன்கு உருட்டப்பட்ட மற்றும் முழு சமமான பவுன்சை வழங்குகிறது' என்றனர்.






      Dinamalar
      Follow us