/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திடீர் தீ விபத்தில் கூரை வீடு சேதம்
/
திடீர் தீ விபத்தில் கூரை வீடு சேதம்
ADDED : மே 02, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதமானது.
விக்கிரவாண்டி பட்டி தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி சாந்தி, 55; கூலித் தொழிலாளி. இவர், நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்குச் சென்றார். மதியம் 2:00 மணியளவில் இவரது கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வி.ஏ.ஓ., சீனுவாசன், கிராம உதவியாளர் செந்தில்குமார் ஆகியோர் தீ விபத்து சேத மதிப்பீடு குறித்து ஆய்வு செய்தனர்.