/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் ஏல களங்களில் மேற்கூரை விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ADDED : மே 10, 2024 01:04 AM
செஞ்சி: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் செஞ்சி மார்க்கெட் கமிட்டி அதிகாரிகளை சந்தித்து திறந்த வெளி களங்களில் மேல் கூரை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.
மாநில கரும்பு விவசாயிகள் அணி செயலாளர் சக்திவேல் தலைமையில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் செஞ்சி மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் வினோத் குமார், மேற்பார்வையாளர் ஏழுமலை ஆகியோரை சந்தித்து அளித்த மனு:
செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் காலியாக உள்ள இடங்கள் அனைத்திலும் மேற்கூரை அமைக்க வேண்டும். மழைநீர் தேங்காதபடி வாய்க்கால் அமைக்க வேண்டும். மழைக் காலத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை பாதுகாக்க தார் பாய் கொடுக்க வேண்டும்.
வியாபாரிகள் இருப்பு வைத்துள்ள நெல் மூட்டைகளை ஒரு வாரத்தில் வெளியேற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட அவைத் தலைவர் ஏழுமலை, செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள், செஞ்சி, வல்லம் ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.