/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு
/
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 16, 2024 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி கோட்டை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடந்தது.
புதிய தலைவராக காமராஜ், செயலாளராக இன்பழகன், பொருளாளராக கோகுலகிருஷ்ணன் பெறுப்பேற்றனர். ரோட்டரி மண்டல ஆளுநர் கந்தன், மாவட்ட நிர்வாகிகள் லோகநாதன், வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னாள் தலைவர் குறிஞ்சிவளவன் அறிமுக உரை நிகழ்த்தினார்.
முன்னாள் தலைவர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன், பாஸ்கர், சந்திரசேகர், ஜெரால்டு, கருணைவேல் முன்னாள் செயலாளர் ராஜகோபால், பொருளாளர் செங்குட்டுவன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.