/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் இன்ஜினியரிடம் ரூ.53.28 லட்சம் மோசடி
/
திண்டிவனம் இன்ஜினியரிடம் ரூ.53.28 லட்சம் மோசடி
ADDED : மே 16, 2024 02:47 AM
விழுப்புரம்: திண்டிவனத்தில் கப்பல் பொறியாளரிடம் ஆன்லைனில் ரூ.53.28 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம், காரக்குறிச்சியை சேர்ந்தவர் எம்பெருமான் மகன் நவீன் ஹர்ஷவர்தன்,36; இவர், ஹாங்காங் நாட்டு கப்பல் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றார்.
விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பங்குச்சந்தை விளம்பரத்தில் இருந்த எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டார்.
எதிர்முனையில் பேசிய மர்ம நபர், தான் அனுப்பும் லிங்கில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்து லாபம் பெறுமாறு கூறகினார். அதனை நம்பிய நவீன் ஹர்ஷவர்தன், தனது வங்கி கணக்கு மற்றும் அவர் தாயின் வங்கி கணக்கிலிருந்து கடந்த ஏப்., 2ம் தேதியில் இருந்து 5ம் தேதி வரை மொத்தம் ரூ.54.39 லட்சம் அனுப்பி, மர்ம நபர் கூறிய ஸ்டாக்குகளை வாங்கினார். அதில், ரூ.1.11 லட்சம் திரும்ப பெற்றார். மீதி ரூ.53.28 லட்சத்தை திரும்ப பெற முடியாத போது தான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.