/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொறியியல் பட்டதாரியிடம் ரூ.7 லட்சம் 'அபேஸ்'
/
பொறியியல் பட்டதாரியிடம் ரூ.7 லட்சம் 'அபேஸ்'
ADDED : செப் 04, 2024 03:44 AM
விழுப்புரம்,: திண்டிவனம் அருகே பொறியியல் பட்டதாரியிடம் இருந்து ஆன்லைன் மூலம் 7 லட்சம் ரூபாய் அபேஸ் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் வினோத்,31; பொறியியல் பட்டதாரி. இவரை கடந்த மாதம், டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக தான் அனுப்பும் டாஸ்க்கை முடித்தால் அதிக லாபம் பெறலாம் என கூறினார்.
அதனை நம்பி வினோத், கடந்த 20ம் தேதி முதல் மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ. 7 லட்சதத்தை அனுப்பி, டாஸ்கை முடித்தார். ஆனால், அதற்கான பணம் வரவில்லை. மர்ம நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து வினோத் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.