/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்தியவர் தடுப்பு காவலில் கைது
/
மணல் கடத்தியவர் தடுப்பு காவலில் கைது
ADDED : செப் 07, 2024 07:20 AM

விழுப்புரம் : தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரம், வழுதரெட்டி நித்தியானந்தம் நகரைச் சேர்ந்தவர் கூத்தாண்டவன் மகன் ராஜவேல்,36; இவர் மீது மணல் கடத்தல் வழக்கு பல நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை 28ம் தேதி டாடா தோஸ்த் வேனில் மணல் கடத்தி வந்த ராஜவேலை, விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., தீபக்சிவாச் பரிந்துரையை ஏற்று, ராஜவேலைவை தடுப்பு காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் உள்ள ராஜவேலுவிடம், விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று வழங்கினர்.