/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சங்காலயா மோட்டார்சில் புதிய கார் அறிமுகம்
/
சங்காலயா மோட்டார்சில் புதிய கார் அறிமுகம்
ADDED : மே 18, 2024 06:06 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை, சங்காலயா மோட்டார்சில் மகேந்திரா நிறுவன புதிய கார் அறிமுக விழா நடந்தது.
சங்காலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் துரைராஜ் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றினார்.
முதன்மைச் செயல் அதிகாரி கார்த்திக் மற்றும் பொது மேலாளர் சசிக்குமார் வரவேற்றனர். மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவன விற்பனை மேலாளர் விக்னேஷ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் நியூஸ் ஜெ., தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் 'எக்ஸ்.யு.வி 3எக்ஸ் ஓ' என்ற புதிய காரை அறிமுகப்படுத்தினார்.
விழாவில் அ.தி.மு.க., நகர செயலாளர் ராமதாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்யராஜ், அசோக்குமார், விழுப்புரம் ஸ்டேட் பாங்க் கிளை முதன்மை மேலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
சர்வீஸ் மேலாளர் ராமச்சந்திரன் புதிய வாகனம் பற்றி, வாடிக்கையாளர்களிடம் விளக்கினார். விற்பனை பிரதிநிதி சையத்பீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொது மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
புதிய கார் குறித்து, துரைராஜ் கூறுகையில், 'புதிய வாகனமான 'எக்ஸ்.யு.வி 3 எக்ஸ் ஓ' காரின் ஆரம்ப விலை 7.49 லட்சம் ரூபாய். சுற்றுச்சூழல் மாசின்றி குறைந்த எரிபொருள் செலவில் இயங்கும் வகையில், வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 20 முதல் 21 கி.மீ., வரை செல்லும். அனைத்து வகை தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் மாடல்களில் 8 வண்ணங்களில் கிடைக்கிறது' என்றார்.

