நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: கோட்டப்பூண்டி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
மரம் நடுவோர் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் சங்கர் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் 30 மரக்கன்றுகள் நடப்பட்டது.
போதைத் தடுப்பு உறுதியேற்பு, இயற்கை உணவுகளின் அவசியம் , துணி பைகள் பயன்படுத்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகளை பேசினர்.
நிகழ்ச்சியில், சித்தகிரி முருகன் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், மரம் நடுவோர் சங்கத்தினர்கள், பசுமைப்படை சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

